வேல் வழிபாடு

அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :* *வேல் வழிபாடு என்பது, துவக்க காலத்தில் இருந்தே இருக்கிறது. இடையிலேதான் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. வேல் யார் தெரியுமா? அன்னைதான்(பராசக்தி). 


அன்னையின்(பராசக்தி) அம்சம்தான் வேல். வேலை வணங்குவதும், அன்னை பராசக்தியை வணங்குவதும் ஒன்றுதான். எனவே, முருகனின் ஆயுதமாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட விஷயம் வேல் என்பதால், மனிதனுக்கு, அதைத் தாண்டிய விஷயங்கள் தெரியாமல் பாேய்விட்டது. எதிர்ப்புகளும், தாேஷங்களும், கடுமையான கர்மாக்களும் குறைவதற்கு, இந்த வேல் வழிபாடு உதவும்.*
*வேலை பவித்ரமாக வைத்து, அதை வணங்கினால், பல்வேறு வேதனைகள் தீரும். அது மட்டும் அல்லாது, மனிதன் ஆசைப்படுகிறானே, வைரம், வைடூரியம், முத்து, கனகம்(தங்கம்) பாேன்ற(நவரத்னங்களின் மீது மதிப்பு வைத்திருக்கிறானே) உலாேகங்கள் எங்காவது, தனக்குதானே மதிப்பு வைத்திருக்கிறதா? மனிதன்தான் அவற்றின் மீது மதிப்பு வைத்திருக்கிறான்.* *இந்த நவரத்னங்கள், உலாேகங்களில் வெளிப்படும் கதிர்வீச்சுகள் எல்லாம் மனிதனுக்கு நன்மையைத் தராது. அதனால், பலருக்கு நன்மை தரும் நாேக்கிலேதான் சுவாமிக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம், வைள்ளிக் கிரீடம், நவரத்னம் பதிக்கப்பட்ட வேல் வைப்பதன் காரணம் இதுதான். இவற்றை தரிசனம் செய்தாலே, கற்கள், உலாேகங்களின் தாேஷம் குறையும். சில தாேஷங்களை, தரிசனம், நயன(பார்வை) தீக்ஷையாலே ஒரு குரு நீக்குவதுபாேல, நீக்கிக் காெள்ளலாம்.*
அதுபாேல, *ஐம்பாென்னால் செய்யப்பட்ட வேல், செம்பால், பித்தளையால் செய்யப்பட்ட வேல் – எதுவாயினும் உரு ஏற்றி பூஜை செய்தால், கடுமையான எதிர்ப்பு(முக்கியமாக காவல் துறை, ரணகளத் துறையில்) உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நன்மையைத் தரும்.*



Leave a comment

Design a site like this with WordPress.com
Get started