முதல் தர புண்ணியம் எது?

அகத்திய பிரம்ம ரிஷிகள் மிக உயர்ந்த புண்ணியம் எது என்ற வாக்கில் உரைத்த வாக்கினை இங்கு கீழே தருகின்றோம். இந்த வாக்கின் முழு பதிவு சித்தன் அருள் – 1097 – அன்புடன் அகத்தியர் – திருவண்ணாமலை வாக்கு! என்ற பதிவில் படிக்கவும். இந்த பதிவு உங்கள் பார்வைக்கு

https://siththanarul.blogspot.com/2022/03/1097.html?m=1

இந்த பதிவில் உள்ள உயர் புண்ணியம் தொடர்பான வாக்குகளை பாரப்போம்:-

அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின் தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலை வகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே.

அவைதன் நல்முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்துச் சென்று கொண்டாலே இவையன்றி கூற இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட வகுத்து மற்றவர்களுக்கு செய்தால் அப்பனே ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூட அப்பனே இவையன்றி கூற இப்படிச் செய்தால் நலன்கள், இப்படிச்செய்தால் இவையன்றி இறையருள் கிட்டும் என்பதைக்கூட சொல்லிக் கொண்டே சொல்லிக்கொண்டே சென்றிருந்தால் அப்பனே அதில்தான் அப்பனே முதல் வகையான புண்ணியங்கள்.

அனைவரும் அன்னத்தையும் இவையன்றி கூற யான் எதனை என்றும் குறிப்பிட இல்லாமல் அன்னத்தையும் மற்றவர்களுக்கு எவை என்று கூறும் எதனையும் என்றும்கூற (அன்னதானம் முதலிய) புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது அப்பனே எவையன்றி கூற பின் மற்றவர்களுக்கு பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே.

அப்பனே பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு நிலமைகள் மாறும். மாறும் என்பேன்

எனவே அடியவர்கள் அன்னதானம், தீபங்கள் ஏற்றும்போது அவர்களுக்கு நல் வழி சொல்லி அவர்களை கடைபிடிக்கச் செய்யுங்கள். ஏதும் தெரியாத மனிதர்களுக்கு குருநாதர் காட்டிய நல் வழிகளை எடுத்து கூறுங்கள். அவர்கள் அதை பின்பற்றினால் அதுவே உங்களுக்கு முதல் மிக உயர் புண்ணியத்திற்கு வழி வகுக்கும்.)



Leave a comment

Design a site like this with WordPress.com
Get started