திருச்செந்தூர் ஏன் செல்ல வேண்டும்?

குருநாதர்:- அப்பனே செந்தூர் (திருச்செந்தூர்) ஏன் செல்கின்றோம் அப்பனே, கூறு?

அடியவர்:- முருகன் ஸ்தலம். சடாச்சரன் உள்ள இடம்

குருநாதர்:- அப்பனே, அது இல்லையப்பா.

அடியவர்:- (மனித பின் மூளையில் உள்ள) கர்மக்குடுவையை செந்தூரான் மட்டுமே அழிக்க முடியும்

குருநாதர்:- அப்பனே, அதை யான் (ஏற்கனவே) தெரிவித்து விட்டேன். பின் தெரியாததை கூறுங்கள்.

அடியவர்:- …….

குருநாதர்:- அப்பனே யான் சொன்னேனே பின் வரிசையாக ( நெற்றியில் ) செல்கள் இருக்கும் என்று. அப்பனே சில செல்கள் அங்கு சென்றால் புருவின் ( புருவத்தின் ) மத்தியில் வந்து விடும் அப்பா. ஆனால் சென்று கொண்டே இருக்க வேண்டும். இன்னும் தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. அங்கெல்லாம் சென்றால் (நெற்றியில் உள்ள) சிதறி கிடக்கின்றதே அதெல்லாம் ஒன்று சேரும் அப்பனே. இப்படி சேரந்தால்தான் அப்பனே பக்தியில் வெற்றி கிடைக்கும். ஆனாலும் அப்பனே பின் சில சில மனிதர்களுக்கு தானாகவே புண்ணியங்கள் சேர்ந்து விடும். இறை பலங்கள் வந்து விடும். தானாகவே ( அவ் செல்கள்) சேர்ந்துவிடும். (அப்படி) அவை சேர்ந்துவிட்டால் நீங்கள் நினைத்ததை எளிதில் அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. வரும் காலங்களில் அதனை பற்றியும் எடுத்துரைக்கின்றேன் அப்பனே.



Leave a comment

Design a site like this with WordPress.com
Get started