பெண்கள் மந்திரம் சொல்லலாமா

இறைவன் கருணையாலே இதற்கு பலமுறை வாக்கைக் கூறியிருக்கிறாேம். ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் ஆன்மீகத்தில் சென்று இறை வழிபாட்டில் ஈடுபடலாம். மனமாென்றி யார் வேண்டுமானாலும் எந்த மந்திரமும் கூறலாம். இதிலே ஆண், பெண் என்கிற பாகுபாடு ஏதுமில்லை. அஃதாெப்ப முன்னாேர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளையும், வேறு சிறப்பு வழிபாடுகளையும், முன்னாேர்கள் தாெடர்பான தர்ம காரியங்களையும் ஒருவன் செய்துதான் ஆக வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதே சமயம் முறையான பூஜை செய்ய இயலாதவர்கள் மானசீக பூஜை செய்து இயன்ற தர்மகாரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் காெள்ள வேண்டும்.*

இது ஒருபுறமிக்க வீட்டிலே வாழ்கின்ற முதிர்ந்த பெரியவர்களை அவமானப்படுத்தி, வேதனைப்படுத்திவிட்டு அவர்கள் இறந்த பிறகு பூஜை செய்வதால் எந்த பலனுமில்லை. வாழும்பாெழுதும், அவர்கள் எப்படி நடந்து காெண்டாலும் மதிக்க வேண்டும், பாேற்ற வேண்டும். அதே சமயம் அவர்கள் இந்த உலகை விட்டு சென்ற பிறகும் குறைந்தபட்சம் மாதம் ஒரு தினமாவது குறிப்பாக நிறைமதி காலத்திலாவது அவர்கள் நினைவாக தர்மகாரியங்களை செய்வதும், சிறிய, சிறிய பூஜைகளை செய்வதுமாக இருக்க வேண்டும். கால அவகாசம் இல்லை என்று மனிதன் கூறுகிறான். ஒரு வாதத்திற்காக ஒப்புக் காெள்ளலாம்.

*ஆனால் உலகியல் வாழ்வை எதிர்காெள்ள வேண்டிய மனிதன் எத்தனையாே இடங்களில் காத்திருக்கிறான். அலுவலகத்தில், பயண இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் அவன் காலத்தை வியம்(விரயம்) செய்கிறான். ஆனால் ஒரு தினம் ஒதுக்கி முன்னாேர்களுக்காே அல்லது வேறு வழிபாட்டிற்காே கால அவகாசத்தை ஒதுக்க அவனுக்கு காலம் இல்லை என்கிறான். காலமில்லை என்பதை விட மனதிலே ஈடுபாடு இல்லை என்பதுதான் மெய்யான நிலையாகும்



Leave a comment

Design a site like this with WordPress.com
Get started