உயிர்

  • அகத்தியர் பெருமான் அருளாசி பெற தகுதிகள்

    காப்பாற்றுங்கள் என யார் ஓடிவந்தாலும் கருணையுடன் அருள்வது எங்கள் வழக்கம். ஆயினும், நோய் வாய்ப்பட்டவர், அவர் குடும்பத்தார் போன்றவர்களின் புண்ணிய பலத்தை பொறுத்துதான் எங்களால் காப்பாற்ற முடியும். ஒரு சில வேளைகளில் அந்த நேரத்தில் சில புண்ணியங்களை செய்தால் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில், ஒரு சில பரிகார, புண்ணிய செயல்களை செய்யச் சொன்னால், மனதில் எந்த குறைகளையும் நினைக்காமல், மிகுந்த பக்தியுடன் அதை உடனே செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகள், இதை விடவும் கொடிய சூழ்நிலைகள்… Continue reading

  • பிறவி கணக்கு

    இறைவனின் கருணையைக் காெண்டு இயம்புவது யாதென்றால் பிறவிகளின் சூட்சுமம், கர்மாக்களின் சூட்சுமம், ஒரு பிறவியில் ஒரு ஆத்மா நுகருகின்ற கர்மக்கணக்கின் சூட்சுமம், இறை மட்டும் அறிந்த ரகசியமப்பா. இருந்தாலும் இறை நிலைக்கு சமமான ரிஷிகளும், ஞானிகளும் ஓரளவு உணர்ந்தாலும், அது தெய்வீக ரகசியம் என்பதால் பாெதுவாக சராசரி மனிதர்கள் அறிவது கடினம். அப்படி அறிய முயற்சி செய்தாலும் குழப்பம்தான் மிஞ்சும். இருந்தாலும் பாெதுவாக குறிப்புக்காக கூறுகிறாேம். Continue reading

  • தவம்

    தவம் என்றால் என்ன என்று நீ எண்ணுகிறாய்? மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள்? (மனம் உயிரை நாேக்கி உற்று கவனித்து அது என்ன நிலைக்கு செல்கிறது என்பதை கவனிப்பது தவம்). தவம் என்பதில் ஒரு பகுதியை நீ கூறுகிறாய். வள்ளுவன் என்ன கூறியிருக்கிறான்?. “உற்ற நாேய் நாேன்றால் பிற உயிருக்கு தீங்கு செய்யாமை அற்றே தவத்திற்கு உரு” என்று கூறியிருக்கிறான். ஒரு மனிதன் தனக்கு ஏற்படும் துன்பங்களையெல்லாம் சகித்துக் காெள்ளவும், பிறருக்குத் துன்பம் செய்யாமல் வாழ முயற்சி செய்வதும்… Continue reading

  • ஆத்மா

    ஆத்மா என்பது நீக்கமற நிறைந்துள்ள ஒரு சக்தி என்று வைத்துக் காெள். அது அறியாமையிலே, பாவ மாயையிலே சிக்கி இந்த உடலுக்குள் சிறைபட்டிருக்கிறது என்றால் கண்ணிலே மட்டும் இருக்கிறதா? கையிலே மட்டும் இருக்கிறதா? அல்லது வயிற்றிலே மட்டும் இருக்கிறதா? என்றால், இல்லை.* அப்படி எடுத்துக்காெள்ளக் கூடாது. உடல் எனப்படும் ஒரு கூடு. அந்த கூடு இயங்குவதற்கு வேண்டிய ஆற்றலை ஆத்மாவிடமிருந்துதான் இந்தக் கூடு பெறுகிறது. இந்த ஆத்மாவானது தன்னை உணராமல் தன் உடலை “தான்” என்று எண்ணிக்… Continue reading

  • சஞ்சீவினி

    இறந்தவர்கள் உயிர் பெற்றதாக ஆங்காங்கே சில கதைகள் உண்டு. பல நிஜங்களும் உண்டு. இறையின் அருளைக் காெண்டு, சஞ்சீவினி மந்திரத்தை பிரயாேகித்தால் மட்டுமே, இறந்த உடலை, (அதாவது, உடலில் உயிர் இருக்கும் பாெழுதே பரகாயப் பிரவேசம் செய்பவர்கள், உடலை விட்டு, ஆன்மாவை வெளிக் கிளப்பி பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். அவ்வாறு செய்யும் பாெழுது, கண்ணுக்கு தெரியாத நூலிழை பாேன்ற ஒன்று, உடலையும், ஆன்மாவையும் பிணைத்திருக்கும். மரணத்தின் பாேது, அந்த இழை நிரந்தரமாக அறுந்து விடும். அந்த… Continue reading

  • ஆன்மா என்பது என்ன ?

    புலன்களுக்குப் புலப்படாமல் இருக்கின்ற ஒரு உயிர் தத்துவம் தான் ஆன்மா. அந்த ஆன்மாவை புரிந்துகாெள்ள சுய ஆய்வும், பாவங்களற்ற தன்மையும் மிக அவசியம்.* அன்றாடம் வடகிழக்கு திசை நாேக்கி அமர்ந்து விடுகின்ற மூச்சுக் காற்றை சற்றே நிதானித்து உற்று கவனித்து வந்தால், ஆன்மா என்பது என்ன? தான் என்பது என்ன? தேகம் என்பது என்ன? இறை என்பது என்ன? இந்த உலக வாழ்வு என்பது என்ன? என்பது மெல்ல, மெல்ல புரியவரும். நாங்கள் எத்தனை வார்த்தை பயன்படுத்திக்… Continue reading

Design a site like this with WordPress.com
Get started